
அன்புள்ள எழுத்தாளர்களே, கவிஞர்களே,
நாம், ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்கள், ஒரு சிறப்பு இனம். நாம் சுய உந்துதல், மற்றும் தூண்டுதல் ஆத்மாக்கள். நம் எழுத்துப் பணிக்காலம் முழுவதும்,
சோதனைகள் மற்றும் அவமானங்கள், ஏளனங்கள் அல்லது பல முறை, நம் வேலையை நிராகரித்த பல நிகழ்வுகளை அனுபவித்தோம். நம் படைப்புகளுக்கு ஒரு சிறு பாராட்டு எதிர்பார்க்கும்போது, அவர்கள் படிக்க நேரம் இல்லை என்று கூறுவார்கள். ஒரு புத்தகத்தின் விலை ரூ.100ஐ, தாண்டிவிடடால் அதிர்ச்சி அலை எழுப்புவார்கள். ஆனால் அதே சமயம் ஒரு சினிமா டிக்கெட்டில் ரூ.1000 செலவிட சிறிதளவும் தயக்கம் காட்டமாட்டார்கள். அவர்களின் நியாயப்படி அவர்கள் சரியாக இருக்கலாம். நாம் இன்முகத்துடன் முன்னேறினோம். அனைவரையும் வென்றோம்!
இவ்வகையான கஷ்டங்கள் அவ்வபோது ஏற்பட்டாலும் ஒவ்வொருமுறையும் நாம் ஒரு பீனிக்ஸ் பறவைபோல வெற்றிகரமாக வெளிவந்தோம், மேலும் கலைகள் மற்றும் இலக்கியம்மீதான நமது ஆர்வத்தைத் தொடர்ந்தோம். எனவே, கலைஞர்களாகிய நமக்கு எந்த ஒரு சிறப்பு அறிவுரையும் தேவையில்லை, மாறாக மற்றவர்களை மன அழுத்தத்திலிருந்து உயர்த்தும் திறன் கொண்டவர்கள், நாம்.
உங்களைச் சுற்றிப் பாருங்கள். கொரோனா தொற்றுநோயில் உலகம் முழுவதும் சிக்கியுள்ளது. எல்லார் மனதிலும் இருள் சூழ்ந்துள்ளது.
பெரு வணிகங்கள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு மக்கள் வேலை இல்லாமல் போகிறார்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெவ்வேறு இடங்களில் சிக்கிக்கொண்டுள்ளனர், இளம் ஜோடிகளுக்கு அன்புக்குரியவர்களை சந்திக்கக் கூட முடியவில்லை, மாறாக ஸ்கைப் மற்றும் வாட்ஸ்அப்பில் திருமணங்கள் நடக்கின்றன.
பல பெரிய வணிகர்கள் வியாபாரத்திலிருந்து வெளியேறி, மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள், பிரபலங்கள் மற்றும் பணக்காரர்கள்
சிலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள், இவ்வகையான துன்பப் பட்டியல் முடிவற்றது. சில அவநம்பிக்கையாளர்கள் இந்த உலகம் எப்போது முடிவடையும் என்று கூடக் காத்திருக்கிறார்கள். மேலும், நாம் பலவற்றைக் காண்கிறோம்.
உடல்நிலை சரியில்லாத பெரியவர்கள் தங்கள் வீட்டில் உதவியற்ற நிலையில் சிக்கிக்கொண்டுள்ளனர், மரண நோயால் பாதிக்கப்பட்ட நீண்டகால நோயாளிகள், அனைவரும் ஒரு சிறிய நம்பிக்கை, அன்பு மற்றும் பாசத்திற்காக ஏங்கித் தவிக்கிறார்கள். ஊடகங்கள் உள்ளிட்ட சமூக வலைபின்னல் தளங்கள் அனைத்தும் தேவையற்ற அரசியல் விவாதங்கள் மற்றும் வெறுக்கத் தக்க பேச்சுக்கள் நிறைந்தவை என்பதை நாம் காண்கிறோம். மதம், சாதி, இனம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு எல்லா இடங்களிலும் குழப்பங்களும் சண்டை சச்சரவுகளும் நிரம்பி உள்ளன, இந்த லாக்டௌனில், ஏழைகளின் வாழ்வாதாரம் முன்னெப்போதையும் விடக் கடினமாகிவிட்டது.
நம் எழுத்தாளர் சமூகம் சுதந்திர மற்றும் தன்னார்வமுள்ள ஆத்மாக்களால் நிரம்பியுள்ளது. நாம் ஆபத்துக்களை எதிர்கொள்ளத் தயங்குவதில்லை. சவால்களை வாய்ப்புகளாகப் பார்ப்போம். இந்தச் சந்தர்ப்பம் நம் வாழ்நாளில் நமக்குக் கிடைத்த அரிய வாய்ப்பாகும். அந்த ஆண்டவனின் ஆசியால், நாம் சரியான நேரத்தில், சரியான இடத்தில் இருக்கிறோம் என நம்புகிறோம். எழுத்தாளர்கள் ஒரு சிறப்பு இனம், நம் சொற்கள் மூலமாகவும், கதைகள் மற்றும் கவிதைகள் மூலமாகவும் மாயாஜாலத்தை உருவாக்குவோம். துன்பத்தால் துவண்டு போன இதயங்களுக்கு நாம் நேர்மறை எண்ணங்கள் மற்றும் நம்பிக்கை விதையைப் பரப்புவோம். இவ்விதம் எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாற்றல் கலைஞர்களாகிய நாம், நமது செயல்முறையினால், நம் அடையாளத்தை நிறுவி, நமது மதிப்பை அவர்களுக்குப் புரிய வைக்க முடியும்.
இந்த நேரத்தில் எழுத்து உலகத்திற்கு நமது சேவை மிகவும் தேவை! இந்த ஒரு உன்னதமான நோக்கத்துடன், நாங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டத் திட்டங்களின் தொகுப்பைக் கொண்டு வந்துள்ளோம். இதன் மூலமாக நாம் நமது படைப்புகளால் பிரபலமடையவும் விரும்புகிறோம்.
Join WhatsApp group link: https://chat.whatsapp.com/IahMpZUqiep9myzDZlo1Nl
இப்படிக்கு தங்கள் அன்புள்ள,
சப்தா